Monday, 13 March 2017

விக்ரம்

விக்ரம் 

விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.

விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது. அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்து திரை விமர்சகளிடமிருந்து நன்மதிப்பை பெற்றார்.

விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவணம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனை


சுப்ரமணிய பாரதியார்
           சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு


திருவள்ளுவர்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்
பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய
பணி: புலவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
  • பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
  • இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அவர் இயற்றிய வேறு நூல்கள்
திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

கம்பன் வாழ்க்கை வரலாறு



கம்பன் வாழ்க்கை வரலாறு

கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: கிபி 1180
பிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: கிபி 1250
பணி: தமிழ்க் கவிஞர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.
கம்பரின் கவிப்புலமை
மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.
இலக்கிய வாழ்க்கை
கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.
கம்பராமாயணம்
கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.
இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.
போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.
இறப்பு
கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு


தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு

பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! !
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத் தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள் ளது என பாதியில் நிறுத்தி விட வேண்டாம். இதை ஒவ் வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டு ம் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத் தியவன் ராஜ ராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயி னும் இவற்றில் முரண்பாடுகள் காணப் படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜ ராஜன் காலத்தில் கை யாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள் வது அவசியம்…
பெரிய கோயில் அளவு கோல்
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.
இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகு கள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திற னைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற் கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின் றன என்பதைக் கவனித்த பின் னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்ட ப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமா னத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப் படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமா னம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தி ன் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட் டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமி ருக்கிறது.

தஞ்சை பெரியகோவில் - கல்வெட்டுகள்
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (ய உதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத் தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைக ளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்து ச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது.

தஞ்சை பெரியகோவில்
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முத லிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு


சோனியா காந்தி  வாழ்க்கை வரலாறு

                                                       இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள். தனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்னரும், அரசியலில் சேர விரும்பாமல் இருந்த அவர், 1997 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்தார். அதன் பின்னர், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். ஒரு வெளிநாட்டவராக இருந்து, காங்கிரஸ் கட்சியில் நீண்ட கால ஆட்சியில் இருப்பவர் என்று வரலாறு படைத்த அவர், ‘உலகிலேயே மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணி’ என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். பரம்பரைப் பரம்பரையாக காங்கிரஸில் இருந்து வரும், நேரு குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கத்தினாராக மாறிய சோனியா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், சாதனைகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: டிசம்பர் 09, 1946
பிறப்பிடம்: லூசியானாவெனிடோஇத்தாலி
பணி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
சோனியா காந்தி அவர்கள், இத்தாலியில் உள்ள வெனிடோப் பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் விசென்ஸாவில் உள்ள லூசியானா என்றொரு சிறிய கிராமத்தில், ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாக டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும்கல்வியும்
சோனியா காந்தி அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே அவரது குடும்பம், இத்தாலியில் உள்ள ஆர்பாஸனோ என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தது. இதனால், தனது பள்ளிப்படிப்பை, ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், ஆங்கிலம் கற்க விரும்பியதால், 1964 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது, தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு கிரேக்க உணவகத்தில் பணியாளராகவும் பணிபுரிந்தார்.
இல்லற வாழ்க்கை
1965 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்தார், அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி அவர்கள், சோனியா காந்தியை ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததால், மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்த அவர்கள், 1968 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணமானவுடன் சோனியாவை இந்தியா அழைத்து வந்த ராஜீவ் காந்தி அவர்கள், அவரது இல்லத்திற்கே அவரைத் துணிவாக அழைத்துச் சென்றார். அவர்களின் திருமணத்தை இந்திராகாந்தியும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு குழந்தைகள் பிறந்தனர். இந்திராகாந்தியின் மறைவுக்கு முன்னரும், 1982 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி பொறுப்பை ஏற்றப் பின்னரும், எந்தவொரு பெருமிதமும் இல்லாமல் இல்லத்தரசியாகவே இருந்து வந்தார்.
அரசியல் வாழ்க்கை
பிரதம மந்திரியின் மனைவியாக மாறிய பின்னர், தனது கணவருக்குத் துணையாக அரசியலிலும் ஈடுபட எண்ணிய அவர், 1984ல், அமேதியில் ராஜீவை எதிர்த்து போட்டியிட்ட அவரது தம்பி மனைவியான மேனகா காந்திக்கு எதிராக, தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் முதன்முதலில் களமிறங்கினார். 1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், அரசியலில் நுழையாத சோனியா அவர்கள், அவரது மரணத்திற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து தொய்வடைந்ததாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரின் வேண்டுதலின் பேரிலும், 1997ல் அரசியலில் இறங்கப் போவதாக விருப்பம் தெரிவித்தார். முதலில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மாறிய சோனியா அவர்கள், அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998 ஆம் ஆண்டிலே, அக்கட்சித் தலைவர் பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அவரை, அவைத்தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 1999ல், அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி என்ற இடத்தில் போட்டியிட்ட அவர், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜ் என்பவரைத் தோற்கடித்து, பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ – தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை 2003ல் கொண்டுவந்தார். காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவி வகித்து, சாதித்துக் காட்டிய அவர், 2004 மற்றும் 2009-ல் உத்தரப்பிரதேசத்தில் ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதம மந்திரி பொறுப்பைப் புறக்கணித்தல்
2004 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், என்டிஏ கட்சியைப் படுதோல்வியடையச் செய்த அவர், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தோல்வியடைந்த என்டிஏ கட்சி, சோனியாவை ‘அந்நியப் பிறப்பு’, ‘இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு’ போன்ற பல சட்ட பூர்வமான காரணங்களை சுட்டிக் காட்டி, அவர் பிரதம மந்திரியாகத் தடைகளாக இருப்பதாகக் கூறி, கிளர்ச்சிகளைக் கிளப்பி, உச்ச நீதி மன்றத்தில் உரிமைக் கோரியது. ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, ‘அவர் பிரதமராக சட்டப்படி எந்த தடையுமில்லை’ எனத் தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சி கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சியே பின்னாளில் ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (யுபிஏ) என்ற பெயரிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் தடைகளை விளக்கினாலும், ‘லோக் சபாவின் காங்கிரஸ் பாராளுமன்றத் தலைமைப் பொறுப்பையும், பிரதம மந்திரி பதவியே வேண்டாம்!’ என்று புறக்கணித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக சோனியா
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர். மன்மோகன் சிங் என்பவரை பிரதம மந்திரி பதவிக்காகப் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே தனது லோக்சபா பொறுப்பு மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார். இருப்பினும், 2006 மே மாதம் நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில், 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்ற அவர், மீண்டும் அப்பதவிப் பொறுப்பேற்றார். தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகவும் இருந்து வரும் அவர், தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றை நடைமுறையில் கொண்டுவர முக்கியப் பங்காற்றினார்.
2009 பொதுத்தேர்தல்களில் அவரது தலைமையில் உள்ள காங்கிரஸ்-ஏற்படுத்திய-யுபிஏகட்சி அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடிய அளவில் வெற்றிப் பெற்றது. அவர் அறிவித்தது போலவே, மன்மோகன் சிங்கே பிரதம மந்திரி என்ற நிலையில், காங்கிரஸ் 206 லோக்சபா இடங்களில் வென்று, வரலாறு காணாத சாதனைப் படைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
விருதுகளும்அங்கீகாரங்களும்
2006 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம் மூலமாகவும், 2008 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம் மூலமாகவும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சோனியா காந்தி அவர்களை, ஃபோர்ப்ஸ் இதழ் ‘உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில்’, அவரது பெயரை மூன்றாவதாக 2004 ஆம் ஆண்டிலும்,  ஆறாவதாக 2007 ஆம் ஆண்டிலும் பெயரிட்டது. அதே இதழ், அவரை 2010 ஆம் ஆண்டில், ‘கிரகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதாவது நபர்’ என்று மதிப்பிட்டது. மேலும், ‘உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்’ என்று அவரைப் பல பத்திரிக்கைகளும் கணித்தது.

ராகுல் காந்தி வாழ்க்கை வரலாறு

ராகுல் காந்தி வாழ்க்கை வரலாறு

ராகுல் காந்தி அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தில் பிறந்த சோனியா காந்தியின் மகன் ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  செல்வாக்கு மிக்கக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜூன் 19, 1970
பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா
பணி: அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
ராகுல் காந்தி அவர்கள், 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் புது தில்லியில், இந்தியாவின் முன்னால் பிரதமராக மந்திரியான ராஜீவ்காந்திக்கும், தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார். இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேரனும், இந்திராகாந்தியின் பேரனும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஆரம்பக் கல்வியை, நியூ தில்லி மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கிய அவருக்கு, இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் ஃபிளோரிடா மாநிலத்தில் உள்ள ரோல்லின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்ந்த அவர், பி.ஏ இளங்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார். பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர், ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, எம்.ஃபில் பட்டம் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்
வெற்றிகரமாகத் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து, லண்டனில் உள்ள மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும் கண்காணிப்புக் குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்த அவர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியா திரும்பினார். 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், மும்பையில் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனத்தை நடத்திவந்தார்.
அரசியல் வாழ்க்கை
2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவ்வப்போது தனது தாயாருடன் பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வந்த ராஜீவ்காந்தி அவர்கள், அரசியலில் தன்னுடைய வருகையை மார்ச் 2004 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான அமேதியில் (உத்திரப்பிரதேச மாநிலம்) போட்டியிடுவதாக அறிவித்தார். ராகுல்காந்தி, தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரானார்.
அவ்வப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், ஊடகங்களும் இவரை வருங்கால காங்கிரஸ் கட்சித் தலைவர் என சித்தரித்தாலும், எதைப்பற்றியும் கவலைப் படாமல், தனது தொகுதி பிரச்சனைகளிலும், உத்திரப்பிரதேச அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இருந்தாலும், தேர்தல் காலக்கட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல், ‘இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும்’, ‘இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கும்’ செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2008 ஆம் ஆண்டு ஒரு நேர்காணல் தேர்வை நடத்தி, இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும், ஆலோசகர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 3,30,000 –க்கும் மேற்பட்டட வாக்குகளைப் பெற்று, மீண்டும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
ராகுல்காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள்
அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, விரைவில் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவருகிறார்.
குறிப்பாக சொல்லப்போனால், தந்தை ராஜீவ்காந்தி இறப்பிற்குப் பிறகு, அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் நம்பும் அளவிற்கு செல்வாக்குப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஏ. ஆர். ரகுமான்

ஏ. ஆர். ரகுமான்

                                                                        இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் பற்றி விரிவாக காண்போம்.
பிறப்பு: ஜனவரி 6, 1967
இடம்: சென்னை (தமிழ்நாடு)
தொழில்: இசையமைப்பாளர்
பிறப்பு:
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
ஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.
இசை பயணம்:
ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்?’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.
சாதனைகள்:
1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு இசையமைத்து வெளிவந்த ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.
ஆஸ்கார் விருதுபெற்ற “ஸ்லம் டாக் மில்லியனியர்”:         
2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.
ஆல்பம்:
ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது. இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.
பிற விருதுகள்:
  • இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.
  • இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
  • பத்மஸ்ரீ விருது
  • லாரன்ஸ் ஆலிவர் விருது
  • தமிழக திரைப்பட விருது
  • மலேசிய விருது
  • ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.
  • கோல்டன் குளோப் விருது
  • கிராமிய விருது
இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.
இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.
“உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”

சந்திரசேகர ஆசாத்


சந்திரசேகர ஆசாத்


                                                                              சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர். ஒரு துடிப்பு மிக்க இலஞனாக மட்டுமல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மாபெரும் புரட்சிவாதியாக திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.
பிறப்பு: ஜூலை 23, 1906
இடம்: பாப்ரா (சபுவா மாவட்டம்) உத்திரபிரதேசம், இந்தியா
பணி: விடுதலை போராட்ட வீரர்
இறப்பு: பிப்ரவரி 27, 1931
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சந்திரசேகர சீதாராம் திவாரி எனப்பட்ட சந்திரசேகர ஆசாத் அவர்கள், 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23  ஆம் நாள் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சபுவா மாவட்டத்திலுள்ள “பாப்ரா” என்ற இடத்தில் சீதாராம் திவாரிக்கும், ஜக்ராணி தேவி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
இவருடைய தந்தை அலிஜார்பூரில் பணியாற்றி வந்ததால், இவர் தன்னுடைய இளமைக் காலத்தை மத்திய பிரதேச மாநிலம் சபூவா என்ற மாவட்டத்திலுள்ள பாப்ராவில் கழித்தார். இவரது தாயான ஜக்ராணி தேவி, இவரை சமஸ்கிரதம் கற்க காசியிலுள்ள பெனாரசுக்கு அனுப்பினார். சந்திரசேகர ஆசாத் முறையாக வில் வித்தையும் கற்றுத் தேர்ந்தார்.
விடுதலை போராட்டத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் பங்கு
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சந்திரசேகர ஆசாத்தினை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சந்திரசேகர ஆசாத்திற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. பிறகு, பிரித்தானிய இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் பெயர், தந்தைப்பெயர் மற்றும் முகவரியை கேட்டபொழுது அவர் முறையே “ஆசாத் (ஆசாத் என்றால் விடுதலை), சுதந்திரம் மற்றும் சிறை” என்றார். இதனால், கோபமுற்ற நடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கு சந்திரசேகர ஆசாத், ‘நான் அப்படிக் கூறினால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்’ என்றார். மேலும் கோபம் கொண்ட நடுவர், 15  பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிபடுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி, ஒத்துழையாமை கொள்கையைக் கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். பிறகு, இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அவர், 1925  ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். இந்த ரயில் கொள்ளைக்கு பிறகு, ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது.
சந்திரசேகர ஆசாத், பகவத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு” என உருவாக்கினர்.
இறப்பு
1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் அலகாபாத்திலுள்ள “அல்ப்ரெட்” பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றிவளைக்கப்பட்டார். நீண்ட நேரம் ஆங்கில காவல் துறையினரிடம் போராடிய அவர், காலில் குண்டடிபட்டு தப்பிசெல்லமுடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், அவர்களிடம் சிக்கிவிட கூடாது என நினைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
சந்திரசேகர ஆசாத் மறைந்து விட்டாலும் அவர் விட்டு சென்ற சுவடுகள் இன்னும் மறையாமால்தான் இருக்கின்றன. அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது. அவர் கொள்ளப்பட்ட இடமான “அல்ப்ரெட்” பூங்கா இன்று அவர் பெயரிலேயே “சந்திரசேகர ஆசாத் பூங்கா” என அழைக்கப்பட்டு வருகிறது.

சத்ரபதி சிவாஜி


சத்ரபதி சிவாஜி


                                                                           மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய வீரமிக்க ‘மாமன்னன்’ சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர் முறைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 19, 1627
இடம்: சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா
பணி: பேரரசர்
இறப்பு: ஏப்ரல் 03, 1680
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள், 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.
பேரரசை விரிவுபடுத்துதல்
1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.
மொகலாயர்களுடன் போர்
1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில், முகலாய படைதளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர், பிறகு சாயிஸ்தாகான் தலைமையில் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார். 1664 மற்றும் 1670 களில் இரண்டு முறை சூரத்தை தாக்கி, கொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடுசெய்து சிவாஜியை கொலைசெய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி, புலி நகத்தை பயன்படுத்தி தப்பினார். அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.
சத்ரபதியாக முடிசூட்டிக்கொள்ளுதல்
1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 1676 ஆம் ஆண்டு, தென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பிய அவர், வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும், ஆர்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
ஆட்சி முறை
சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.
இறப்பு
சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.
தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

வ. உ. சிதம்பரம் பிள்ளை

வ. உ. சிதம்பரம் பிள்ளை

                                              வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
 பிறப்பு: செப்டம்பர் 51872
பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம்தமிழ்நாடுஇந்தியா
இறப்பு: நவம்பர் 181936
தொழில்: வக்கீல்அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு
வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.
குழந்தை பருவமும் சட்டத்துறையும்
அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.
சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.
கப்பல் நிறுவனம்
இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.
கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.