Monday, 13 March 2017

ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி


ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி

தேவையான மருந்துகள்:-

1.            ஓமம் – அஜமோதா    1,000 கிராம்
2.            தண்ணீர் ஜல        10 லிட்டர்



செய்முறை:-

                ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து அர்க்கம் இறக்கும் முறைப்படி அர்க்கம் தயாரிக்கவும்.
ஓமம்

சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம் – ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல். 

குரோசானி ஓமம்.
வெகு மூத்திரம் வாதம் வீரிய நட்டம் புண்
உகு பேதி உட்கடுப்புனூடே மிகு கரப்பான்
தீராக்கபம் இவை போம் செய்யக் குரோசானி என்றால்
வாரா மயக்கம் உறுமால்.


அளவும் அனுபானமும்:- 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள்.


                தீரும் நோய்கள்:- வயிற்றுப் போக்கு (அதிஸார)செரியாமை (அஜீர்ண)பசியின்மை (அக்னிமாந்த்ய)நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் (கிரஹணீ)சிறுநீர்ப்பை நோய்கள் (பஸ்தி ரோக)1. மேலும் குடலிரைச்சல்இரைப்புபல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3. 
ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தைமுதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. 
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. 
ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. 
சோர்வு நீங்க ஓமத்தண்­ர்
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பாஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பாதேங்காயுடன் ஓமத்தை அரைத்துக்போடுவோம்.
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு,நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து,சூடான சாதத்தில் ஊற்றிஒரு சொட்டு நெய்ஊற்றி,உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
7. 
வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.

No comments:

Post a Comment