Monday, 13 March 2017

சேரர் வரலாறு


சேரர் வரலாறு


சேரர் வரலாறு
சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு.

அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு.

அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன. சேரர்களை குடக்கோ,பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை, சேரல், சேரலர், சேரமான் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.

சேர நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம்.

சங்க காலச் சேரர்களின் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று  உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
மன்னர்கள் 
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
வரலாற்றுக் கால சேர மன்னர்கள்
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள்  ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாகக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
பெயர்  -  காலம் - (ஆட்சி ஆண்டுகள் )
வானவன் (அ) வானவரம்பன். கி.மு. 430-350   (20)
(குட்டுவன்) உதியஞ் சேரலாதன் கி.மு. 350  - 328 ( 22 )    
இமயவர நெடு சேரலாதன் கி.மு.329  - 270  (58)
பல்யானை செல்கெழு குட்டுவன்கி.மு. 270-245  (25)
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245- 220 (25)
பெருஞ்சேரலாதன்  - கி.மு. 220 - 200   (20)
குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு. 200 - 180    - (20)
கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் கி.மு.180 - 125  - (55)
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125 -87  - (38)
செல்வக் கடுங்கோன் வாழியாதன் கி.மு. 87 - 62   - (25)
யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ கி.மு. 62 - 42 - (20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 42 - 25     - (17)
இளஞ்சேரல் இரும்பொறை கி.மு.25 -  9   (16)
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 9 - 1  (8)
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் கி.மு. 20 - கி.பி. 10  (30)
பாலை பாடிய பெருங்கடுங்கோ  கி.பி.1 - 30 (30)
கணையன் ( கணைக்கால் இரும்பொறை) கி.பி. 20 - 30  (10)
கோக் கோதை மார்பன் கி.பி. 30 - 60  (30)
சேரன்செங்குட்டுவன் கி.பி. 60 - 140   (70)
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை கி.பி. 140 - 150  (10)  
சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் கி.பி. 150 -160 (10)
சேரமான் கணைக்கால் இரும்பொறை கி.பி. 160 - 180 (20)  
சேரமான் இளங்குட்டுவன் கி.பி.180 - 200  (20)
நம்பி குட்டுவன் கி.பி. 200 - 220 (20)
பூரிக் கோ கி.பி. 220 - 250  (30)
சேரமான் குட்டுவன் கோதை  கி.பி. 250 -  270     - (20)
சேரமான் வஞ்சன் கி.பி. 270 - 300  30
மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) கி.பி. 330 - 380  (50)

இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன், 
ஆட்டன் அத்தி எனபோர்.
சேர மன்னர்களின் பட்டியல்.

No comments:

Post a Comment